செய்திகள் சில வரிகளில்…விருதுநகர்

மேக துாது செயலி அறிமுகம்

அருப்புக்கோட்டை: வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள மாவட்ட வேளாண் வானிலை பிரிவு மூலம் விவசாயிகள் வானிலை பற்றி தெரிந்து கொள்ள மேகதுாது செயலி அறிமுகப்

படுத்தப்பட்டுள்ளது. அறிவிப்புகளை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்றப்படி

பேரழிவிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அலைபேசியில் பிளே ஸ்டோர் மூலம்

பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

நலத்திட்டபணிகள் விழா

ஸ்ரீவில்லிபுத்துார்: கீழபுதுதெருவில் ரேஷன்கடை அடிக்கல், மஞ்சபூத்தெரு மற்றும்

தட்டாங்குளத்துபட்டியில் தண்ணீர் தொட்டி திறப்பு, பெருமாள்பட்டியில் தார்ரோடு,

கொளூர்பட்டியில் சமூகநலகூடம் திறப்பு விழாக்கள் எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமையில் நடந்தது. நிலவள வங்கி தலைவர் முத்தையா, அர்பன் வங்கி தலைவர் மீராதனலட்சுமி,

அக்ரோ தலைவர் முருகன், நகர செயலர் இன்பதமிழன் பங்கேற்றனர்.

தரமற்ற ரோட்டால் அவதி

சாத்துார்: சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த நிலையில் தார் ரோடு

போடப்பட்டுள்ளது. தரமற்ற நிலையில் உள்ளதால் டூவீலரை ஸ்டாண்டு போட்டு நிறுத்தத் கூட முடியவில்லை. ஸ்டாண்டு பதிய சாய்ந்து விடுகிறது. கார்களின் டயர் அடுத்தத்தை கூட ரோடு தாங்குவதில்லை. தரமாக ரோடு போட அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

அருப்புக்கோட்டை: பாலவநத்தம் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் வேண்டியவர்களுக்கு பணி வழங்குவதாகவும், கூலி 256 ரூபாயில் 180 மட்டும் வழங்குவதாக கூறி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர்

சந்திரமோகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பூங்கோதை, ஒன்றிய செயலர்

ரவிச்சந்தின் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் நடுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிய ரோட்டரி ஆண்டை முன்னிட்டு

மரக்கன்றுகள் நடும்விழா தலைவர் கண்ணன் தலைமையில் நடந்தது. செயலர்

லட்சுமணன், நிர்வாகிகள் பெரியசாமி, கருமாரிமுருகன், அழகப்பன், சுப்புராம் பங்கேற்றனர்.

ஆட்டோக்களை வழங்குங்க

சாத்துார்: தாலுகா போலீசார் ஊரடங்கு விதி முறையை மீறி ஆட்களை ஏற்றி சென்ற

ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். பல நாட்கள் ஒரே இடத்தில் நிற்பதால் டயர்களில் காற்று,பேட்டரி சார்ஜ் இறங்கி விடுகிறது. ஊரடங்கால் தவணை தொகை செலுத்த முடியாமல் தவிக்கும் ஆட்டோ உரிமையாளர்கள் பொருளாதார பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பறிமுதல் ஆட்டோக்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

டாக்டருக்கு பாராட்டு

ராஜபாளையம்: ராஜபாளையம் இன்னர்வீல் கிளப் ஆப் சஞ்சீவி ஹில்ஸ் சார்பில் புதிய

நிர்வாகிகள் தேர்வு மற்றும் டாக்டருக்கு பாராட்டு விழா நடந்தது. முன்னாள் தலைவர் சித்ரா தலைவர் உஷாராணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டாக்டர் கு.கணேசன் சேவையை பாரட்டி பரிசு வழங்கப்பட்டது. டாக்டர் பொன்னுச்சாமி இலவச முகக்கவசம்

வழங்கினர். இன்னர் வீல் கிளப் செயலாளர் சத்யா நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment