‘யூ டியூப்’ வாயிலாக பட்டிமன்றம்: தமிழ் வளர்க்கும் பெண் அதிகாரி

அருப்புக்கோட்டை ஆணுக்கு நிகராக பெண்கள் இன்றைய உலகில் அனைத்து பிரிவுகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். இன்றைய உலகில் வேலைக்கு செல்லாமல் இருக்கும் பெண்களை பார்ப்பது அரிது.

தான் செய்கின்ற பணிகளில் துாய்மை மற்றும் தன்னுடைய தனிதிறமைகளை வெளிப் படுத்தவும் தயங்குவதில்லை. பன்முகதிறன் மிக்கவர்களாகவே உள்ளனர்.அந்தவகையில் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு கருவூல அதிகாரியான புனிதா பாண்டியராஜனுக்கு இயல்பாகவே தமிழ் மீது பற்று அதிகம்.

சிறுவயதிலிருந்து இன்று வரை 500 க்கு மேற்பட்ட மேடைகளில் பேசி உள்ளார். கவிஞராக , பேச்சாளராக வலம் வரும் இவர் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் ‘யூ டியூப்’ வாயிலாக நிறைய பட்டிமன்றங்களில் பேசி வருகிறார்.கல்லுாரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பேச்சாற்றல், தமிழ் இலக்கிய பேச்சாற்றல், எழுத்தாற்றல் பயிற்சி கொடுத்து வருகிறார்.

அரசு பணியையும் பார்த்து கொண்டு தமிழ் இலக்கிய பணியையும் விடாமல் செய்து வருகிறார். தன் ஊதியத்தில் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் படிப்பிற்கும், ஏழைகளின் மருத்துவத்திற்கும் செலவிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது. பாராட்ட 84893 69983.

Related posts

Leave a Comment