அரசு அலுவலகத்தில் சோலார் பிளான்ட்’:குஜராத்தை பின்பற்றும் விருதுநகர்

விருதுநகர்:விருதுநகர் பொதுப்பணித்துறை ஓய்வு மாளிகையில் ‘சோலார் பிளான்ட்’ (சூரிய சக்தி) அமைத்து மின் கட்டணத்தை தவிர்த்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் போல் நாட்டின் பிற மாநிலங்களும் மின் தேவையில் தன்னிறைவு பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தேசிய மாற்று எரிசக்தித்துறை எம்.என்.ஆர்.இ., திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் மாடியில் சோலார் பிளான்ட் அமைத்து அலுவலகத்துக்கான மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

அதன்படி விருதுநகர் – மதுரை ரோடு பொதுப்பணித்துறை ஓய்வு மாளிகையில் 2 கிலோ வோல்ட் திறன் கொண்ட சோலார் பிளான்ட் ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் அமைக்கப் பட்டு உள்ளது.மின் தடை ஏற்படும் போது ஒரு நொடியில் தானாக சோலார் பிளான்ட் இயங்கி உடனுக்குடன் மின்சாரம் சப்ளையாகும். ஐந்தாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைத்தளம், முதல் தளத்திற்கு தேவையான மின் சப்ளை இதன் மூலமே பெறப்படுகிறது.

இதனால் மின் கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது. பொதுப்பணித்துறையை அடுத்து சிவகாசி வணிகவரித்துறை அலுவலகத்திலும் சோலார் பிளான்ட் அமைக்க பொதுப்பணித்துறை எலெக்ட்ரிக் பிரிவிடம் மதிப்பீடு பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.

Related posts

Leave a Comment