விளைநிலமாகும் தரிசு நிலங்கள்

சாத்துார்:தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தரிசு நில மேம்பாடு சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தது 5 ஆண்டுகள் நிலையான தரிசு நிலங்கள் இத்திட்டத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது. கிராமத்தில் 25 ஏக்கர் தொகுப்புள்ள தரிசு நிலங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் ஒரு குழுக்களாக தரிசு நிலங்களை தேர்வு செய்து விண்ணப்பங்களை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம். இந்த திட்டத்தில் சிறு தானியம் பயிரிட 50 சதவீதம் மானியத் தொகையும் வழங்கப்படுகிறது. தகவல்களை சாத்துார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறலாம்.

Related posts

Leave a Comment