யோசியுங்க: ரேஷன் பொருட்களை வீடு தேடி வழங்கலாமே கொரோனா முடியும் வரை தேவை நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்க ரேஷன் பொருட்களை வீடுதேடி வழங்கும் வகையில் மாற்று வழிகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 600 முதல் 1200 கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தில் ஒருசில நாளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதால் மக்கள் பெருமளவில் கூடுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை காணப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் வங்கி கணக்கின் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதை பெற வங்கிகளில் அதிகளவில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் காத்து கிடக்கின்றனர்.

முதியோர்களுக்கான மாதாந்திர பென்ஷன் தொகை வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இவர்களும் வங்கிகளில் குவிகின்றனர். இதை தவிர்க்க அரசின் உதவிகளை வீடுதேடி வழங்க மாவட்ட நிர்வாகம் சரியான திட்டமிடுதலுடன் செயல்படுத்த வேண்டும். இதனால் பொதுமக்களும் தனித்திருக்கும் நிலை உருவாகும். தொற்று பரவலையும் கட்டுப்படுத்தலாம்.

தினம் 40 வீடுகளுக்கு …

கொரோனா ஒழிக்கபடும் வரை மக்கள் வங்கிகள் , பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க 100 நாள் வேலை கூலியை வங்கி ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். ரேஷன் பொருட்களை தினம் 40 வீடுகளுக்கு நேரடியாக வழங்கினால் கூட ஒரு மாதத்தில் அனைவருக்கும் வழங்கலாம். முதியோர் பென்ஷன் தொகையை மீண்டும் போஸ்ட்மேன்கள் மூலம் வழங்க வேண்டும்.

-பால்ராஜ், தன்னார்வலர், ஸ்ரீவில்லிபுத்துார்.

Related posts

Leave a Comment