நடிகை சுகன்யாவிற்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்து மழை பொழிந்து வரும் ரசிகர்கள் !

சென்னை : தமிழ்த் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சுகன்யா அழகும் அமைதியும் கொண்டு ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டி வந்தவர்.

தனது படங்களின் மூலம் இன்றளவும் பல கோடி ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் நடிகை சுகன்யாவிற்கு இன்று பிறந்தநாள்.

ஜூலை 8ஆம் தேதியான இன்று இவர் தனது 51வது பிறந்தநாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்வித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வைத்த பல சிறப்பான கதாநாயகிகளில் சுகன்யாவும் ஒருவர். அழகும் அமைதியும் கொண்டு ஆரவாரமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிரடி காட்டி வந்த இவர் பல வெற்றிப்படங்களில் நடித்து இன்றும் ரசிகர்களிடம் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா இன்றுவரை பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இவர் நடிகர் விஜயகாந்த் உடன் முதன்முறையாக இணைந்து நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் வரலாறு காணாத அளவு மிகப்பெரிய வெற்றியடைந்து கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு மேல் ஓடி பல்வேறு சாதனைகளை செய்தது. மேலும் இந்த படம் விஜயகாந்த் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இவ்வாறு 1992 ஆம் ஆண்டு வெளியான சின்னகவுண்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சுகன்யாவிற்கு சிறந்த கதாநாயகிக்கான தமிழ்நாடு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

மேலும் சின்ன கவுண்டர் வசூல் செய்த சாதனையை சில ஆண்டுகளாக எந்த ஒரு படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த சின்னகவுண்டர் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சிறந்த கதாநாயகிக்கான முத்திரையை தொடர்ந்து பதித்து வரும் சுகன்யா தமிழில் கார்த்திக், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தியன் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத் தியாகியாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றது மட்டுமல்லாமல் இந்த படம் இந்தியாவில் பல்வேறு விருதுகளையும் வென்று வந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

என்றென்றும் தமிழ் சினிமாவில் நீங்காத நினைவுகளை கொண்டிருக்கும் படங்களை கொடுத்த நடிகை சுகன்யா சமீபத்தில் சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் தோன்றி மீண்டும் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்து வந்த நடிகை சுகன்யா ஜூலை 8ஆம் தேதியான இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக இவரது ரசிகர்கள் இணையத்தில் இவருக்கு வாழ்த்துக்களை கூறி, அவரை வாழ்த்து மழையில் நனையவைத்து உள்ளன.

Related posts

Leave a Comment