தமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று, மேலும் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பிற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாகவே சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைகிறது. ஜூலை 3ம் தேதி சென்னையில், 2082 பேருக்கு பாதிப்பு பதிவானது.

பிறகு தினமும் 2ஆயிரத்தை விட குறைவாக பாதிப்பு பதிவாகிறது.

டிஸ்சார்ஜ் அதிகம் நேற்று 1261 பேருக்கு பாதிப்பு பதிவானது. இன்று, சென்னையில், 1216 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 73728. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழக மொத்த பாதிப்பில் பாதிக்கும் மேல் சென்னையில் பதிவாகியுள்ளது.

மாவட்ட நிலவரம் சென்னை -1216, திருவள்ளூர் – 364, விருதுநகர் – 289, மதுரை – 262, கள்ளக் குறிச்சி – 254, தூத்துக்குடி – 196, செங்கல்பட்டு – 169, நெல்லை – 110, கோவை – 98, குமரி – 93, திருச்சி – 93, சேலம் – 92, தேனி – 90, வேலூர் – 87, ராணிப்பேட்டை – 79, திருவண்ணாமலை – 70, காஞ்சிபுரம் -67 கடலூர் – 67, சிவகங்கை – 62, ராமநாதபுரம் – 61, தர்மபுரி – 56, புதுக்கோட்டை – 46, திருவாரூர் – 40, விழுப்புரம் – 31, விழுப்புரம் – 31, தஞ்சை – 32, தென்காசி – 29, நாகை – 25, திருப்பத்தூர் – 19, ஈரோடு – 17, நாமக்கல் – 17, நீலகிரி – 13, திருப்பூர் – 6, அரியலூர் – 5, பெரம்பலூர் -5, திண்டுக்கல் – 4 கரூர் – 4, கிருஷ்ணகிரி – 4 என பாதிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

Leave a Comment