நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நெய்வேலி : நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்எல்சி.யில் பாய்லர் வெடி விபத்து மற்றும் தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

Related posts

Leave a Comment