சப்பைக்கட்டு கட்டாதீர்கள்… மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு ‘எலக்ட்ரிக் ஷாக்’ -மு.க.ஸ்டாலின்

சென்னை: மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு ‘எலக்ட்ரிக் ஷாக்’ கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஈரம் இருந்தால், மின்கட்டணம் குறித்த சலுகைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என அவர் கூறியுள்ளார்

மின்கட்டணம் “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடுமை முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய “யூனிட்களை” கழிக்காமல்”- செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் “கட்டண உயர்வுப் பிரச்சினை” என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் திரு. தங்கமணியோ அல்லது முதலமைச்சர் திரு. பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக இருக்கிறது.

மக்கள் தவிப்பு ஊரடங்கைப் பிறப்பித்தது அரசு. அது ‘பேரிடர் நிர்வாகத்தின்’ கீழ் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கை. ஆகவே அந்த காலகட்டத்தில் வேலை இல்லை; சம்பளமும் இல்லை. கூலி வேலை செய்வோர் கூட தினசரி உணவிற்கு வழியின்றி தவித்தார்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பணமின்றி – வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார்கள். சுலப வகையிலும் வருமானம் ஏதுமின்றி – வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போரிடம் அ.தி.மு.க. அரசு ஏன் மனமிறங்க மறுக்கிறது?

Related posts

Leave a Comment