தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா.. ஒரு வயது குழந்தை உள்பட 64 பேர் மரணம்!

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 1,30,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு வாரமாக 3600 என்கிற அளவில் தான் உள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4163 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து 46,105 ஆக உள்ளது.

ஒரு வயது குழந்தை தமிழகத்தில் இன்று ஒரு வயது குழந்தை உள்பட ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1829 ஆக அதிகரித்துள்ளது. சென்னை (27), செங்கல்பட்டு(7), மதுரை (6), தேனி (3), ராமநாதபுரம் (4) கோவை (3), தூத்துக்குடி (2), திருப்பூர் (2), விருதுநகர் (1) உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மதுரையில் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் எப்படி சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 1205 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது செங்கல்பட்டில் 242 பேர், திருவள்ளூரில் 219 பேர், தூத்துக்குடியில் 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் அதிகம் மதுரையில் 192 பேர், வேலூரில் 140 பேர், விருதுநகரில் 143 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 145 பேர், சேலத்தில் 127 பேர், திருச்சியில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தேனியில் 108 பேர், திருவண்ணாமலையில் 103 பேர், கன்னியாகுமரியில் 105 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

34,962 பேருக்கு பரிசோதனை தமிழகத்தில் இன்று 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 14,64,281 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 15,29,092 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 37,309 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன

Related posts

Leave a Comment