‘paul harries fellow ‘ : முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு ‘paul harries fellow ‘ என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமானதம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment