பாழாய்போச்சு காட்சி பொருளான சேவை மைய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நீதி வீணடிப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதிகளில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடங்கள் செயல்படாமல் இருப்பதால் அரசு நிதியும் ரூ.கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது.

கிராம பகுதி மக்கள் பட்டா , சாதி , பிறப்பு , இறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் , தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்காக அலைச்சல் ஏற்படுவதோடு ஒரு நாள் பொழுதும் வீணாகியது. இதனால் சான்றிதழ்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் ஊராட்சிகளில் கிராம சேவை மையம் கட்டடப்பட்டது.

ஊராட்சிகளில் தலா ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டது. கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இன்று வரை எங்கும் பயன்பாட்டிற்கு வரவில்லை. சில கிராமங்களில் கட்டப்ப ட்ட நோக்கத்தினை தவிர மற்ற தேவைகளுக்கு பயன்படுகிறது. ஒரு சில கிராமங்களில் சமூக விரோத செயல்களுக்கு துணைபோகிறது. சில இடங்களில் பயன்பாட்டிற்கு வரு முன்பே சேதமடையும் நிலைக்கு வந்து விட்டது.

மாவட்டம் முழுவதும் அரசால் ரூ. கோடிகணக்கில் செலவழித்தும் செலவழித்த நோக்கமும் நிறைவேறாது உள்ளது. இப்படியே போனால் பராமரிப்பின்றி இடியும் நிலைக்கு வந்துவிடும்.

பயன்பாட்டிற்கு வராது சேதம்

எந்த ஊராட்சியிலும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. ஒவ்வொன்றுக்கும் பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டியும் பயன்பாட்டிற்கு வராதது வேதனையை தருகிறது. வேறு ஏதேனும் அரசு அலுவலகங்கள் செயல்படவாது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலே சேதமடைந்து விடும்.பழனிவேல்ராஜன், தனியார் ஊழியர், சிவகாசி.

Related posts

Leave a Comment