பொக்கிஷம் நிறைந்த பனை மரங்கள்

விருதுநகர்யோக கலையில் ‘தாளாசனம்’ (பனை மரத்து ஆசனம்) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் பனை மரம் போல் நுாற்றாண்டு காலம் உடல் ஆரோக்கித்துடன் வாழ முடியும் என யோகா வல்லுனர்கள் கற்பித்து வருகின்றனர்.

பனை மரத்தின் வேர் (பனங்கிழங்கு), பனங் கொட்டை, ஓலை, பனம் பழம், நுங்கு, பதநீர், பனங்கருப்பட்டி என அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.பனை மரக்கன்றுகளை கண்மாய் கரைகளில் நட்டு வளர்த்தால் கரைகள் பலப்படும். ஆண்டு முழுவதும் பனை மரங்களோ மனிதனுக்கு தேவையானதை பூர்த்தி செய்து வருகிறது.

இதன் அருமைகளை உணர்ந்த சிவகாசி அருகே மத்தியசேனை கிராம மக்கள் கண்மாய் கரைகளை பலப்படுத்தும் விதமாக கரைகளின் இருபுறமும் பனை மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். செழிப்பாக வளர்ந்துள்ள பனை மரங்கள் கரைகளை மூடி நிழல் தருகிறது.கரை வழியாக நடந்து செல்வோர் குளுமையான காற்றை அனுபவித்து செல்கின்றனர்.

அற்புதம் நிறைந்த பனை மரம் நுாற்றாண்டு கடந்தும் ஓங்கி வளர்ந்து மனித குலத்துக்காக வாழ் நாள் முழுவதும் உழைத்து வருகிறது பனை மரம். கடும் வறட்சியை தாங்கி வளரும் பனை மரம் மண் அரிப்பை தடுக்கும் வல்லமை பெற்றது. இறைவன் படைப்பில் பல அற்புதங்களை பனை மரம் நிகழ்த்தி வருகிறது. பனை மரம் மீதான விழிப்புணர்வு சமீபத்தில் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது.

Related posts

Leave a Comment