விருதுநகர்மாவட்டத்தில்57கிராமங்கள்மற்றும்தெருக்களுக்குமுழுஊரடங்குமாவட்டஆட்சியர் கண்ணன்அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1742 மேலும் 724 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் விருதுநகரில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 57 பகுதிகளை முழுவதுமாக மூடுவதாக திட்டமிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். அதன்படி அந்த பகுதிகள் அனைத்தும் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு செயல்பட்டு வரும் 1070 சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலை ஆலைகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து 10 நாட்களுக்கு மூடுவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment