விருதுநகர்மாவட்டம்முழுவதும்ஒருவாரம்தளர்வுகள்இல்லாதஊரடங்குஅமல்படுத்தவேண்டும்பாட்டாளிமக்கள்கட்சிகோரிக்கை

விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஒரு வாரம், தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் எனவும் மற்றும் பரிசோதனைகளை அதிகரித்து, முடிவுகளை விரைவாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை…. விருதுநகர் மாவட்டத்தில் கோவிட்19′ சிகிச்சை மையங்கள் அதிகப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் இரண்டு இலக்கங்களில் இருந்த வைரஸ் தொற்று எண்ணிக்கை இப்போது 200, 300 என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 1738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு கொரோனா சோதனைகள் எடுக்கப்படுகிறது. ஆனால் 300 பேருக்கு மட்டுமே சோதனை முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அந்த பரிசோதனை முடிவுகள் வெளிவரவும் 9 நாட்கள் வரை ஆகின்றது. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களை போல விருதுநகர் மாவட்டத்திலும், சமூக தொற்று ஏற்பட்டுள்ள நிலைக்கு அதிக வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பரிசோதனைக்கான போதிய உபகரணங்கள் இல்லாத நிலை இருப்பதாக தெரிகின்றது. எனவே போதிய உபகரணங்களை அளித்து விருதுநகர் மாவட்டத்தில் சோதனைகளின் எண்ணிக்கையை, ஒரு நாளுக்கு 5000 பேருக்கு பரிசோதனைகளை செய்ய வேண்டும். மக்களும் சமூக இடைவெளி முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. எனவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரு வார காலம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். ஒரு வார முழுமையான ஊரடங்கே தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும். அதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற இட வசதியும் விருதுநகர் மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. அதனால், மேலும் கோவிட் சிகிச்சை மையங்களுக்கு விரைந்து அனுமதி அளித்து கோவிட் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமா அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment