Virudhunagar District News

ஜுலை 12 – இன்று விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுகள் 209. சிவகாசி பகுதி தொற்றுகள் 41. (சிவகாசி பகுதி வாரியாக படத்தில் உள்ளது) ஊர் வாரியாக : விருதுநகர் – 55ராஜபாளையம் – 53சிவகாசி – 41திருவில்லிபுத்தூர் – 16அருப்புக்கோட்டை – 13சாத்தூர் – 12திருச்சுழி – 7காரியாபட்டி – 6மல்லாங்கிணறு – 6

Read More

சித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது… ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்

சென்னை: கொரோனா பாதிப்புக்கு இந்திய மருத்துவ முறையை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டில் கொரோனா வார்டை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். மேலும், கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க சித்த மருத்துவம் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைக்கு இணையாக சித்த மருத்துவ சிகிச்சை முறைக்கும் அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ சிகிச்சை முறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ரெம்டெசிவர், டாசிலிசுமாப் போன்ற மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்க ஆரம்பக்கட்டத்திலேயே நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கூறியுள்ளார். இதனிடையே…

Read More

ரோகித்தோட திறமையே அவருக்கு எதிர்மறையாயிடுது.. டேவிட் கோவர் கருத்து

டெல்லி : இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவின் திறமையே சில சமயங்களில் அவருக்கு எதிர்மறையாக மாறிவிடுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்துள்ளார். மைதானத்தில் நீண்ட நேரங்கள் நிதானமாக நின்று விளையாடுவதே ரோகித் சர்மாவின் தனித்திறமை என்று அவர் சிலாகித்துள்ளார். ஆனால் சில சமயங்களில் அதிலிருந்து அவர் தவறும்போது, எதிர்மறை கருத்துக்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் கோவர் சுட்டிக் காட்டினார்.

Read More

தலைவரே.. நல்லா ஆடினா மட்டும் போதாது.. ஜெயிச்சுட்டு வரணும்.. கோலிக்கு கங்குலியின் ஓபன் மெசேஜ்!

மும்பை : வரும் டிசம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதுதான் இந்திய அணி அடுத்து ஆட உள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ஒரு பேட்டியில் பேசினார். அப்போது கேப்டன் விராட் கோலிக்கு ஒரு “மெசேஜ்” ஒன்றையும் கூறினார். கிரிக்கெட் பாதிப்பு கொரோனா வைரஸ் காரணமாக முடங்கி இருந்த கிரிக்கெட் அணிகள் தற்போது தான் பயிற்சி, தொடர்களில் பங்கேற்கத் துவங்கி உள்ளன. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. டெஸ்ட் தொடர் இந்தியாவை தவிர கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் பயிற்சி செய்யத் துவங்கி விட்டன. இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டிசம்பரில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.…

Read More

சிங்கப்பெண்ணே… திண்டுக்கல்: பெரும்பாலான முதன்மை பதவிகளில் கோலோச்சும் மகளிர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பியாக ரவளி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர், எஸ்.பி,. முதன்மை நீதிபதி என நிர்வாகத்தின் முதல்நிலை பொறுப்புகளில் மகளிரே கோலோச்சுகின்றனர். தமிழகத்தில் அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் மாதவரம் உதவி ஆணையராக பணியாற்றிய ரவளி பிரியா திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் திண்டுக்கல்லில் போட்டியிட காத்திருந்தனர். ஆனால் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் மேயராக பெண் ஒருவர் பதவி வகிக்க முடியாத நிலை. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் முதன்மை நிர்வாகப் பணிகளில் பெண் அதிகாரிகளே கோலோச்சி வருகின்றனர். இவர்களது பணி திண்டுக்கல் போன்ற பின்தங்கிய, கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி மாணவியருக்கு முன்னுதாரணங்களாகவும் தன்னம்பிக்கை தூணாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.

Read More

ராஜபாளையம்சரகசேத்தூர்ஊரககாவல்நிலையத்தில்மேலும்இரண்டுபெண்போலீசாருக்குதொற்று

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சரகத்தைச் சேர்ந்த சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் அய்யனார். இவர் கடந்த 5 ஆம் தேதி வைரஸ் தொற்று பாதிப்பினால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அதே காவல் நிலையத்தில் வேலை பார்த்து வரும் இரண்டு பெண் போலீசாருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே சேத்தூர் ஊரக காவல் நிலையம் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பணிபுரியும் காவலர்கள், தற்காலிகமாக சேத்தூர் காவல் நிலையத்தில் வைத்து வழக்குகளை விசாரணை செய்யுமாறு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

Read More

திருவில்லிபுத்தூர்அருகேதேங்காய்ஏற்றிவந்தடிராக்டர்கவிழ்ந்துவிபத்துஏழுபெண்கள்உட்படஎட்டுபேர்படுகாயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவருக்கு கூமாப்பட்டியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இன்று காலை தனது தோப்பில் தேங்காய்களை வெட்டி, தனக்கு சொந்த டிராக்டரில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு, குணவந்தனேரி கண்மாய் கரைப்பகுதியில் புகழேந்தி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக டிராக்டர் கவிழ்ந்து கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்து, திருவில்லிபுத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இலங்கேஸ்வரி, பாண்டி லட்சுமி இரண்டு பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த இரண்டு பெண்களையும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து கூமாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

கல்விக்கு கரம் கொடுத்த சூர்யா.. 100 பிரபலங்கள் வெளியிட்ட பிறந்தநாள் CDP.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

சென்னை: நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் வரும் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. தல அஜித், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடியது போலவே, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையும் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட அவரது ரசிகர்கள் தயார் ஆகி விட்டனர். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 100 பிரபலங்கள் சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு இருக்கின்றனர். சூர்யா பிறந்தநாள் நடிகர் சிவக்குமாரின் மகனாக 1975ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி பிறந்தார் சூர்யா. பல படங்களில் முருகனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சிவகுமார் தனது மூத்த மகனுக்கு சரவணன் என்றும், இளைய மகனுக்கு கார்த்தி என்றும் பெயர் வைத்தார். சினிமாவுக்குள் நுழைந்த சரவணன் சூர்யாவாக மாறி திரை வானில் ஒளி வீசுகிறார். 100 பிரபலங்கள் நடிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள்…

Read More

கொரோனாவை சீனா மூடி மறைத்தது.. உண்மையை சொன்னால் கொன்றுவிடுவார்கள்.. சீன பெண் விஞ்ஞானி கதறல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலை சீனா மறைத்ததாக, அந்த நாட்டின் வைராலஜி பெண் விஞ்ஞானி, லி-மெங் யான் குற்றம்சாட்டியுள்ளார். ஹாங்காங் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர் லி-மெங் யான், சீன நாடு, கொரோனா வைரஸ் பரவலை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சீன அரசுக்கு முதலிலேயே இந்த கொடிய வைரஸ் பற்றித் தெரியும் என்றும், WHO ஆலோசகர் பேராசிரியர் மாலிக் பீரிஸ் இது தெரிந்தும், இந்த விஷயத்தில் அமைதி காத்தார் என்றும் குற்றம் சாட்டினார். தனிப்பட்ட பேட்டி அமெரிக்கா தப்பிச் சென்ற லி-மெங் யான், இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தாமல், ஃபாக்ஸ் நியூஸுக்கு ஒரு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை முதலிலேயே சீன அரசாங்கம் அறிந்திருப்பதாக…

Read More