திருவில்லிபுத்தூர்அருகேதேங்காய்ஏற்றிவந்தடிராக்டர்கவிழ்ந்துவிபத்துஏழுபெண்கள்உட்படஎட்டுபேர்படுகாயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவருக்கு கூமாப்பட்டியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இன்று காலை தனது தோப்பில் தேங்காய்களை வெட்டி, தனக்கு சொந்த டிராக்டரில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு, குணவந்தனேரி கண்மாய் கரைப்பகுதியில் புகழேந்தி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக டிராக்டர் கவிழ்ந்து கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்து, திருவில்லிபுத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இலங்கேஸ்வரி, பாண்டி லட்சுமி இரண்டு பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த இரண்டு பெண்களையும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து கூமாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment