ராஜபாளையம்சரகசேத்தூர்ஊரககாவல்நிலையத்தில்மேலும்இரண்டுபெண்போலீசாருக்குதொற்று

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சரகத்தைச் சேர்ந்த சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் அய்யனார். இவர் கடந்த 5 ஆம் தேதி வைரஸ் தொற்று பாதிப்பினால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அதே காவல் நிலையத்தில் வேலை பார்த்து வரும் இரண்டு பெண் போலீசாருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே சேத்தூர் ஊரக காவல் நிலையம் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு பணிபுரியும் காவலர்கள், தற்காலிகமாக சேத்தூர் காவல் நிலையத்தில் வைத்து வழக்குகளை விசாரணை செய்யுமாறு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment