கல்விக்கு கரம் கொடுத்த சூர்யா.. 100 பிரபலங்கள் வெளியிட்ட பிறந்தநாள் CDP.. தெறிக்கவிடும் ரசிகர்கள்

சென்னை: நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் வரும் ஜூலை 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. தல அஜித், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடியது போலவே, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையும் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட அவரது ரசிகர்கள் தயார் ஆகி விட்டனர்.

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 100 பிரபலங்கள் சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு இருக்கின்றனர்.

சூர்யா பிறந்தநாள் நடிகர் சிவக்குமாரின் மகனாக 1975ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி பிறந்தார் சூர்யா. பல படங்களில் முருகனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் சிவகுமார் தனது மூத்த மகனுக்கு சரவணன் என்றும், இளைய மகனுக்கு கார்த்தி என்றும் பெயர் வைத்தார். சினிமாவுக்குள் நுழைந்த சரவணன் சூர்யாவாக மாறி திரை வானில் ஒளி வீசுகிறார்.

100 பிரபலங்கள் நடிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் காமன் டிபி புகைப்படம் வெளியிடுவது சமீப காலமாக டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர்களின் காமன் டிபியை பல பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் காமன் டிபியை வெளியிட்டு இருக்கின்றனர்.

அயன் ஹீரோயின் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அயன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது சூர்யாவின் பிறந்தநாள் காமன் டிபியை நடிகை தமன்னா வெளியிட்டு, சூர்யாவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மாஸ்டர் இயக்குநர் சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து கைதி எனும் பிளாக்பஸ்டர் படத்தை கடந்த ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அந்த படத்தில் முதலில் நடிக்க சூர்யாவை லோகேஷ் கனகராஜ் அணுகியிருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. விரைவில் சூர்யாவை வைத்து தரமான சம்பவத்தை லோகேஷ் கனகராஜ் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், பிறந்தநாள் சிடிபியை லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த், தல, தளபதி பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டதை தொடர்ந்து தற்போது சூர்யாவின் அட்டகாசமான பிறந்தநாள் காமன் டிபியையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

கல்விக்கு கரம் கொடுத்த சூர்யா நடிகர் விஜய்யின் பிறந்தநாளை போல சூர்யாவின் பிறந்தநாளும் Welfare Day ஆகவே கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், படு மாஸாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காமன் டிபியில், சூர்யாவை சுற்றி பாலம் அமைக்கப்பட்டும், அந்த பாலத்தில் ஏறும் ஏழை மாணவர்கள், சூர்யாவின் கைகளால் உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கி வரும் சிற்பியாக சூர்யா இருந்து வருவதை இந்த காமன் டிபி வெளிக்காட்டியிருப்பதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

Leave a Comment