வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை.. கமலை அடுத்து ரஜினியும் உதவி!

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவச் செலவுகளை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர் பொன்னம்பலம். ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமான இவர், பின்னர் நடிகராக மாறினார். அபூர்வ சகோதரர்கள், மாநகர காவல், வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, சாமி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி ஹீரோக்கள் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள அவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகர் பொன்னம்பலத்தை அழைத்து வந்தார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் திடீர் உடர் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனை சிறுநீரகக் கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று முன் தினம் தீயாய் பரவியது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார். அதுமட்டுமன்றி, பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் அவர் ஏற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தினமும் தொலைபேசி வாயிலாக பொன்னம்பலத்தைத் தொடர்புகொண்டு நடிகர் கமல்ஹாசன் நலம் விசாரித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கான மொத்த செலவையும் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார். இத்தகவலை நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை அவர் கூறும்போது, ‘எனது 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன் மற்றும் மகளின் படிப்புச் செலவை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனது சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டிருக்கிறார்’ என்றார். ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment