இயற்கையுடன் ஒன்றிய புகைப்பட கலைஞர்

அருப்புக்கோட்டை: இயற்கையை ரசிப்பது அனைவருக்கும் பிடிக்கும். மலை பகுதிகள், சமவெளி என இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இடங்களை தேடி தேடி ரசிப்பவர்கள் பலர் உள்ளனர்.

காடுகளை ரசிப்பதும் மலை ஏற்றம் மற்றும் அங்குள்ள பறவைகள், மிருகங்களை புகைப்படம் எடுத்து ஆவணமாக வைத்து ரசிப்பதும் ஒருசிலரின் ‘ஹாபி’.அந்தவரிசையில் அருப்புக்கோட்டையில் ‘மினோ போட்டோ லேப்’ உரிமையாளர் தமிழ்வாணன் உள்ளார். இயற்கை ஆர்வலரான இவர் இயற்கை மற்றும் பறவைகளை விதவிதமாக படம் எடுப்பதில் திறன் மிக்கவர்.

ஒவ்வொரு ஆண்டும் இயற்கையை ரசிப்பதற்காகவே பல இடங்களுக்கு சென்று வருவார். தமிழகத்தில் இவர் செல்லாத காடுகளே இல்லை எனலாம். 1994ல் நேபாளத்திற்கு சென்று ராயல் சித்வான் தேசிய பூங்காவில் யானை மீது சவாரி செய்து ஆசிய காண்டா மிருகங்களை சுற்றி வளைத்து படமெடுத்துள்ளார். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணிகளை படமெடுத்த அனுபவம் உண்டு.

கோட்டை மலை, ஆரியன் கல், காவு, முதலியார் ஊற்று பகுதிகளில் மலை ஏற்ற பயிற்சியும் பெற்றுள்ளார். யானை, புலி, காட்டெருமை, மிளா, மான்கள், வரையாடு என இவர் கேமராவில் சிக்காத பிராணிகளே இல்லை எனலாம். இவரின் போட்டோகிராபிக்கு உறுதுணையாக இருப்பது கேனான் 1 டிஎக்ஸ்கேமரா, 7 டிஎம் கே 2 கேமரா நிக்கான் டி 850 மற்றும் 500 எம் எம், 200 எம் எம் வகை விலையுர்ந்த லென்சுக்ளை

பயன்படுத்துகிறார்.

தமிழ்வாணன் கூறியதாவது: இந்தியாவில் பல பகுதிகளுக்கு சென்று படம் எடுத்துள்ளேன். தற்போது புலிகளை படமெடுப்பதில் ஈடுபட்டு வருகிறேன். தமிழகத்தின் களக்காடு, முண்டந்துறை, பந்திப்பூர், கபினி, வடமாநிலங்களில் தடோபா, பெஞ்ச், ரத்தாம்பூர் பகுதிகளுக்கு சென்று படம் எடுத்துள்ளேன். நிறைய விலங்குகளை படம் எடுத்து ஆவணப்படுத்தி உள்ளேன்.

மலை ஏற்றத்தின் போது வறண்ட நிலம், ஆற்றுக்கரை குறுக்கீடுகள், மூங்கில்காடுகள், புல் மலைகள், பசுமை மர காடுகள், மழை காடுகள் என ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க மனசு மகிழ்ச்சியுறும் .செல்லும் வழியில் காணும் விதவிதமான பறவைகள், பூச்சிகள், வன விலங்குகளை நேரடியாக காணும் வாய்ப்பு, வழியில் மிருகங்களின் கால் தடம், மர பிறண்டல்கள், வேட்டையாடி உண்டு மீதமுள்ள பிராணிகளின் கழிவுகள் ஆகியவற்றை பார்க்க திகிலாகவும், ‘திர்லிங்’ ஆகவும் இருக்கும்.

காடுகளில் படம் எடுப்பது சுகமான அனுபவம். ஆனாலும் மலை ஏற்றத்தின் போது உண்ணி , அட்டை கடியை தவிர்க்க முடியாது. ஊர் வந்து ஒரு மாதம் ஆனாலும் கடியினால் ஏற்பட்ட அரிப்பை கட்டுப்படுத்துவது மிக கஷ்டம். இருந்தாலும் மலை ஏறுவதில் உள்ள சுகமே தனி. இது இவற்றையெல்லாம் மறக்க செய்து விடும்,என்றார்.காடுகள், மலை ஏறுதல், விலங்குகள் பற்றி அப்டேட் செய்து கொள்ள இவரை 94431 03631 ல் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

Leave a Comment