கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

சென்னை: கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யூஜிசி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாநில அரசுகளே தீர்மானிக்க அதிகாரம் வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Leave a Comment