ருசியூட்டும் கண்மாய் மீன்கள்

காரியாபட்டி: மீன் குழம்பு என்றாலே கிராமத்தில் எட்டு வீட்டுக்கு மணக்கும். இது போன்று மணம் வீசுவதற்கு முக்கிய காரணம் ஆறு, குளம், கண்மாய், குட்டைகளில் கிடைக்கும் மீன்கள்தான்.

தற்போது குளம், குட்டைகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலருக்கு எட்டாக்கனியாகி விட்டது. மீன்களால் பல நோய்கள் காணாமல் போன நிலையில் தற்போது இதன் விலையை கேட்டாலே நோய் பற்றிக் கொள்ளும் அளவுக்கு விற்கப்படுகின்றன. இதிலும் காரியாபட்டி கண்மாய் மீன்களுக்கு தனி கிராக்கி உள்ளது. குறிப்பாக பெருங்கெளுத்தி மீன் கிலோ 750க்கு விற்கப்படுகிறது. இவைகள் ஏலம் விட்டு பிடிக்கப்படுவதால் இதை வாங்க இரவு, பகல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

Related posts

Leave a Comment