குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் முனங்கும் முஸ்டக்குறிச்சி மக்கள்

சேதமான படித்துறை ஊரை யொட்டி மழைநீரை சேகரிக்க தெப்பகுளம் ஏற்படுத்தி படித்துறை கட்டினர். ஆட்கள் குளிக்க, கால்நடைகளை குளிப்பாட்ட பயனுள்ளதாக இருந்தது. படித்துறை சேதமடைந்ததால் மக்கள்தான் பாதிப்பை சந்திக்கின்றனர்.

ராஜேந்திரன், விவசாயி.

சிரமப்படுகிறோம்

குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால் சப்ளை இல்லாமல் சிரமப்படுகிறோம். தரைதள தொட்டி இருந்தால் கூட ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அடிக்கடி தண்ணீர் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பகம், குடும்பத்தலைவி.நடமாட முடியலமயான கரையில் குளியல் தொட்டி அமைக்க வேண்டும். மழை நேரத்தில் சகதியாகுவதால் ரோட்டில் நடமாட முடியவில்லை. பேவர் பிளாக் பதிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் சரிவர எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

சரஸ்வதி, குடும்பத்தலைவி.

Related posts

Leave a Comment