இந்தியாவில் திடீரென அதிகரித்த சைக்கிள் விற்பனை…இதுவும் காரணமா?

சென்னை: பெட்ரோல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லாமல் விற்பனையாகும் நிலையில் இன்று டீசல் விலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்பனையாகிறது. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன.

82 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுகிறது. அப்போது முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவின் தாக்கம் காச்சா எண்ணெயிலும் கை வைத்தது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலராக சரிந்தது. பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் உயரத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்த்தி வருகின்றன. ஜூன் 7ஆம் தேதியில் இருந்து படிப்படியாக பெட்ரோல்,டீசல் உயர்ந்து வருகிறது.

80 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் விலை உயர்ந்ததை நாடு முழுவதும் எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த 14 நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை அவ்வப்போது உயர்ந்தது. இந்த நிலையில் இன்று இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்பனையாகிறது. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை நிர்ணயம் வாகன ஓட்டிகளிடையே சின்னதாக ஷாக் கொடுத்துள்ளது.

Related posts

Leave a Comment