இந்த தொற்றை சாதாரணமா எடுத்துக்காதீங்க… பாதுகாப்பா இருங்க… வெஸ்ட்புரூக் அட்வைஸ்

ஹவுஸ்டன் : புளோரிடாவில் மீண்டும் துவங்கவுள்ள என்பிஏ சீசனில் பங்கேற்கவிருந்த நிலையில் 9 முறை ஆல்-ஸ்டார் விருது பெற்ற கூடைப்பந்து ஆட்டக்காரர் வெஸ்ட்புரூக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்லாண்டோவிற்கு ஹவுஸ்டன் ராக்கெட் குழுவினர் புறப்பட்டு செல்வதற்கு முன்பு வெஸ்ட்புரூக்கிற்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை சோஷியல் மீடியாவில் உறுதிப்படுத்தியுள்ள வெஸ்ட்புரூக், தான் தற்போது நலமாக இருப்பதாகவும், நிலைமை சரியானவுடன் தன்னுடைய அணி வீரர்களுடன் இணைவேன் என்றும் தெரிவித்துள்ளார். ரசல் வெஸ்ட்புரூக்கிற்கு கொரோனா 9 முறை ஆல்-ஸ்டார் விருது மற்றும் கடந்த 2017ல் மிகுந்த மதிப்பிற்குரிய வீரர் பட்டங்களை பெற்றுள்ள ஹவுஸ்டன் ராக்கெட் குழுவை சேர்ந்த கூடைப்பந்து வீரர் ரசல் வெஸ்ட்புரூக் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புளோரிடாவில் மீண்டும் துவங்கவுள்ள என்பிஏ சீசனில் பங்கேற்பதற்காக புறப்படவிருந்த நிலையில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.…

Read More

அஜித் பட நடிகைக்கு கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அஜித்துடன் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் பலர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.பிரபல சின்னத்திரை நடிகை நவ்யா சாமி, நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகை ராச்சல் ஒயிட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள உங்க்லி படத்திலும் நடித்து இருக்கிறார். வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது மீ டூ புகார் சொல்லி பரபரப்பாக…

Read More

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி

மந்திரி சபையில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் எங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்து வருகிறது.இதற்கிடையே நேற்று ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பலன் அளிக்கவில்லை. இன்று 2-வது நாளாக மீண்டும் எம்.எல்.ஏ.-க்கள்…

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாராட்டப்பட்ட பெண் அதிகாரி வைரஸ் தாக்குதலுக்கு பலி – மேற்கு வங்காளத்தில் சோகம்

மேற்கு வங்காளத்தில் வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்ட பெண் அதிகாரி கொரோனா தாக்குதலுக்க்கு உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா:மேற்கு வங்காள மாநில ஹோக்லி மாவட்டத்தின் சந்தன்நகர் பகுதியில் துணை மேஜித்திரேடாக பணியாற்றி வந்தவர் டிப்டாடா ராய் (38). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் தனது 4 வயது நிரம்பிய மகனுடன் வாழ்ந்து வந்தார்.இதற்கிடையில், மேற்கு வங்காள அரசின் சிவில் சர்வீஸ் அதிகாரியான இவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவந்தார். குறிப்பாக, மற்ற மாநிலங்களில் இருந்த சொந்த மாநிலமான மேற்கு வங்காளம் வரும் புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார். டிப்டாடா ராயின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு அம்மாநிலத்தின் முதல் மந்திரி உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், டிப்டாடா ராயிக்கு கடந்த…

Read More

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியையொட்டி தலா 3 நாள், பிரதோஷத்துக்கு ஒரு நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளதால் பக்தர்கள் யாரும் தற்போது அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களிலும் அனுமதிக்கப்படவில்லை. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியான தாணிப்பாறை வனத்துறை கேட் மூடப்பட்ட நிலையில் உள்ளது. வருகிற 31-ந் தேதி வரை…

Read More

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவை- மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பு, நோய் கட்டுப்படும் வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் மாவட்டம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள பல நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டரின் விவசாய பிரிவு நேர்முக உதவியாளர் இப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போதிலும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 57 நோய்…

Read More

கல்வி தொலைக்காட்சி வழியாக பள்ளி பாடங்கள் – முதலமைச்சர் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் சென்னை:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தமிழக முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சி மற்றும் பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் தொடங்கி வைத்தார்.இந்த கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணி நேரம்…

Read More

Virudhunagar District Police 14-07-2020

பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் கடவுள்களை பற்றி தவறாக சித்தரித்து கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.#Virudhunagar#szaocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

Edappadi K Palaniswami

இன்று (14.7.2020) பிறந்தநாள் காணும் திரு.இரா.சரத்குமார் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.சரத்குமார் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Read More