நிலம் கையகப்படுத்தி 4 ஆண்டாச்சு…

காரியாபட்டி:நிலம் கையகப்படுத்தி நான்கு ஆண்டுகளாகியும் முடுக்கன்குளம் துணை மின் நிலையத்திற்கான பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் மின் பற்றாக்குறையால் கிராம மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

காரியாபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து இருபது கி.மீ.,துரம் கொண்ட கிராமங்கள் வரை மின் சப்ளை செய்யப்படுகிறது. பலத்த காற்று, மழை நேரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் பழுது ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக மின் சப்ளையை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் பழுது நீக்குவதில் தாமதம் ஏற்படுவதால் அரசு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஸ்தம்பிக்கிறது.

மின் தேவை அதிகரித்து வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டு சீரான மின்சாரம் வழங்க முடியாத நிலையும் உள்ளது. நீண்ட துாரம் மின் சப் ளையால் மின் அழுத்தம் குறைய விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.இதை கருத்தில் கொண்டு முடுக்கன்குளத்தில் 110 கே.வி., துணை மின் நிலையம் அமைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருந்தும் இதுவரை இதற்கான நிதி ஒதுக்கவில்லை. இதன் தாமதத்தால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் சப்ளை நிறுத்தப்படுவதால் கிராமப்புற மக்கள் அவ்வப்போதுஇருளில் தவிக்கும் நிலையும் தொடர்கிறது.

Related posts

Leave a Comment