காத்திருந்த தலைகள்.. கண்ணசைத்த அமித் ஷா.. சச்சின் பைலட்டை வளைக்க தயாராகும் ராஜஸ்தான் பாஜக!

ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் பாஜகவில் இணையலாம் என்று ராஜஸ்தான் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பின் அமித் ஷாவின் அசத்தல் வழிகாட்டுதல் உள்ளது என்கிறார்கள்.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இரண்டு பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு இருக்கிறார் . இதற்கான தீர்மானம் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

பாஜக இந்த நிலையில் சச்சின் பைலட் நேற்று பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. நேற்று அவர் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை பார்க்க போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இதை சச்சின் பைலட் தரப்பு கடைசியில் மறுத்தது. பாஜகவில் சேரும் எண்ணத்தில் சச்சின் பைலட் இல்லை என்று கூறப்பட்டது. அவர் காங்கிரசில்தான் இருப்பார் என்றும் கூறப்பட்டது.

என்ன எண்ணம் இதனால் பாஜகவும் இவரை அழைக்கும் எண்ணத்தில் இல்லை. ஆட்சி கவிழ்ந்தால் தானாக கவிழட்டும் என்றும் பாஜக நினைத்தது. இதனால் பாஜக தலைவர்கள் இதை பற்றி பெரிதாக எதுவும் பேசவில்லை. முக்கியமாக பாஜகவின் ராஜஸ்தான் தரப்பு தலைவர்கள் கூட எதுவும் சொல்லவில்லை. பாஜக சச்சின் பைலட் மீது பெரிய ஆர்வம் காட்டவில்லை.

வெளியேறும் எண்ணம் ஆனால் இப்போது சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து வெளிவரும் எண்ணத்தில் இருக்கிறார். அவரின் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி தலைவர் பறிக்கப்பட்டு உள்ளது . அதேபோல் இன்னொரு பக்கம் அவரின் ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கண்டிப்பாக காங்கிரசில் இருந்து வெளியேறுவார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் அமித் ஷா தனது கவனத்தை சச்சின் பைலட் பக்கம் திருப்பி உள்ளார்.

என்ன உத்தரவு இதற்காக ராஜஸ்தான் பாஜக தலைவர்களுக்கு அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளார் என்றும் கூறுகிறார்கள். அதாவது சச்சின் பைலட் உடன் நட்பாக இருக்கும் பாஜக தலைவர்கள் அவரிடம் பேச வேண்டும். அவருக்கு பாஜகவின் ஆதரவை அளிக்க வேண்டும். அவரை நம் பக்கம் எப்படியாவது இழுக்க வேண்டும் என்று அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

என்ன உத்தரவு இதற்காக ராஜஸ்தான் பாஜக தலைவர்களுக்கு அவர் முக்கிய உத்தரவை பிறப்பித்து உள்ளார் என்றும் கூறுகிறார்கள். அதாவது சச்சின் பைலட் உடன் நட்பாக இருக்கும் பாஜக தலைவர்கள் அவரிடம் பேச வேண்டும். அவருக்கு பாஜகவின் ஆதரவை அளிக்க வேண்டும். அவரை நம் பக்கம் எப்படியாவது இழுக்க வேண்டும் என்று அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

Related posts

Leave a Comment