கொரோனாவில் கேக், தோசை… மாஸ்க் பரோட்டாவும் வந்தாச்சு

விருதுநகர்2020… இந்த ஆண்டை திட்டி தீர்க்காத இளசுகள் இல்லை. கொரோனா காலகட்டத்தை பார்த்து அஞ்சாத பெரியோரும் இல்லை. இக்காலகட்டம் பல வழிகளில் மன அழுத்தம், தவிப்பை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கு துவக்கத்தில் போலீசாரின் கானா பாட்டு விழிப்புணர்வு, கொரோனா மாறு வேட விழிப்புணர்வுகளும் அரங்கேறி வந்தது. சமூக இடைவெளி , மாஸ்க் அணிதல் என கொரோனாவிலிருந்து தப்பிக்க பல்வேறு விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டுதான் வருகின்றன.

அந்த வகையில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும் செல்வம் பேக்கரி, முத்துச்செல்வி ஓட்டல் உரிமையாளர் செல்வம் கொரோனா கேக், தோசை, மாஸ்க் பரோட்டா தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். குழந்தைகளை கவரும் ருசியான வெண்ணிலா கேக் கொரோனா வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா வடிவ தோசையும் செய்யப்படுகிறது.

உண்ணும் உணவில் விழிப்புணர்வு வந்தால் தான் மக்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகமாகும் போலும். விழிப்புணர்வுக்காக முயற்சி ஓட்டல், பேக்கரியில் எப்போதுமே சமூக இடைவெளியை பின்பற்றுவதை அறிவுறுத்தி ஊழியர் பணியில் உள்ளார். தற்போது விருதுநகரில் அசுர வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. மக்கள் மத்தியில் மாஸ்க், சமூக இடைவெளி குறித்து

விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி. கொரோனா பரோட்டா ஒரு செட் ரூ.30 , தோசை ரூ.45 , ஒரு கிலோ கேக் ரூ.300க்கு விற்கப்படுகிறது. பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

செல்வம், உரிமையாளர்

Related posts

Leave a Comment