கல்வி தொலைக்காட்சி வழியாக பள்ளி பாடங்கள் – முதலமைச்சர் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகளை குறித்த காலத்திற்குள் திறக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தமிழக முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சி மற்றும் பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணி நேரம் பாடம் நடத்தப்படும்.  இந்த நிகழ்ச்சியின் போது, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

Related posts

Leave a Comment