கூகிள்-ன் அடுத்த அதிரடி.. ஜியோ-வில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டம்.. முகேஷ் அம்பானி

உலகிலேயே மிகப்பெரிய டெக் நிறுவனமாகத் திகழும் கூகிள், இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு டிஜிட்டல் சேவையை எளிதாகக் கிடைக்கக் கூடிய வகையில் கட்டமைப்பை உருவாக்கும் திட்டமுடன் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை இந்தியாவில் 10 பில்லியன் டாலர் அதாவது 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக நேற்று அறிவித்த நிலையில். இன்று மற்றொரு முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.

Google Sundar Pichai Announced a 75,000 crores | India’s Digital Economy ஆம், இந்தியாவில் வெறும் 3 மாதத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ரைட்ஸ் வெளியீட்டு வாயிலாக மட்டுமே சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்து ராக்ஸ்டாராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுவும் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தைத் தாண்டி முதலீடு உறுதி செய்யும் அளவிலான முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

4 பில்லியன் டாலர் ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே தனது பங்குகளை விற்பனை செய்து 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தற்போது தமிழரான சுந்தர் பிச்சை தலைமையிலான கூகிள் நிறுவனம் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகப் பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியானால் அடுத்த சில வாரத்தில் 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு குறித்து அறிவிப்பு வெளியாகும்.

14வது முதலீட்டாளர் இந்தப் பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் 14வது முதலீட்டாளர் கூகிள் தான். இன்றைய நிலையில் ரிலையன்ஸ் ஜியோவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 74.90 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தாக அதிகப் பங்குகளை வைத்துள்ள நிறுவனம் பேஸ்புக் தான். பேஸ்புக் நிறுவனம் சுமார் 9.99 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

பேஸ்புக் Vs கூகிள் தற்போது கூகிள் நிறுவனம் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்தால் 3வது மிகப்பெரிய முதலீட்டாளராகவும் திகழும். 4 பில்லியன் டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பு படி தோராயமாக 30,000 கோடி ரூபாய். ஆனால் பேஸ்புக் 9.99 சதவீத பங்குகளுக்கு 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் அம்பானி முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் பிரம்மாண்ட திருமணத்திற்கு வந்த பெரு நிறுவனத் தலைவர்களில் கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்துப் பார்க்கும் போதும் முகேஷ் அம்பானியின் குடும்பமும், சுந்தர் பிச்சையும் நீண்ட காலம் நட்பாக இருந்ததும் விளங்குகிறது.

10 பில்லியன் டாலர் இந்தியாவில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்யப்படும் 75,000 கோடி ரூபாய் முதலீடானது படிப்படியான 5 முதல் 7 ஆண்டுகளில் படிப்படியாகச் செய்யப்படும் எனக் கூகிள் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மிகப்பெரிய முதலீடானது இந்தியர் ஒவ்வொருவரும், அவரவர் மொழியிலேயே தகவலை எளிதில் அணுக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தனித்துவத் தேவைகளுக்குத் தகுந்தவாறு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கட்டமைத்தல், வர்த்தகங்கள் டிஜிட்டல்மயமாக மாற இந்த முதலீடுகள் வழி வகுக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment