அலட்சியம் கொரோனா முடிவுகள் அறிவிப்பதில் தொடர்கிறது தாமதம்

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதோடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டோரும் கண்காணிப்பின்றி வெளியே சுதந்திரமாக வலம் வருவதால் தொற்றும் அதிகரிக்கிறது.கொரோன பரவல் மாவட்டத்தில் தீ போல் பரவி வருகிறது .

காய்ச்சல், சளி, உள்ளவர்கள் தாங்களாக முன் வந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனைகளில் பரிசோதனை செய்து கொள்கின்றனர். முடிவுகள் வரும் வரை பரிசோதனை செய்து கொண்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கேட்டுக் கொள்கின்றனர் . ஆனால் இவர்கள் எதையும் காதில் வாங்குவதில்லை . முன்பு 2 ,3 நாட்களில் முடிவுகள் தெரிந்த நிலையில் தற்போது 5 ,6 நாட்கள் ஆகிறது.

அதன்பின் தொற்று என தெரியவரும் நபர் மருத்துமனைக்கு அழைத்து வரப்படுகிறார். அது வரை இந்த நபர் சுதந்திரமாக உலா வர குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்களுக்கும் தொற்று பரவி விடுகிறது. சோதனை செய்தவர்கள் யாரிடமும் தெரிவிப்பதில்லை. இவர்களை முன்பு போல் துறை அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை . முடிவுகளை உடனுக்குடன் தெரிவிப்ப தோடு பரிசோதித்தவர்களை தனிமைபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\

இனி அன்றன்று முடிவுகள்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 3 இயந்திரங்கள் மூலம் தினம் 1000 பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதுவரை நிலுவையில் இருந்த மாதிரி முடிவுகள் அனைத்தும் இன்றுடன் வழங்கப்பட்டு விடும். இனி அன்றன்று சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். பரிசோதனை செய்பவர்களை வீட்டுத்தனிமையில் வைத்து கண்காணிக்கிறோம். குழுவாக பரிசோதனை எடுப்போரை கல்லுாரி முகாம்களின் வைத்து கண்காணிக்கிறோம்.

கண்ணன், கலெக்டர்

தாமதத்தால் அவதி

பரிசோதனை கருவிகளை அதிகப்படுத்தி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். போலீசார், அரசு அலுவலர்கள் பரிசோதனை கூட தாமதமாகதான் தெரிகிறது. இதற்குள் அறிகுறி இன்றி குடும்பத்தினர், உறவினர்களுக்கு தொற்று பாதித்து விடுகிறது . இதை தவிர்க்க இதன மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

பாலன், மெக்கானிக், சாத்துார்.

Related posts

Leave a Comment