மினி விசைப்பம்பு ‘அவுட்’அவதியில் அம்மன்கோவில்பட்டி தெரு மக்கள்

அம்மன் கோவில்பட்டி நடு தெருவில் ரூ. 2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 3 மினி விசைப்பம்புகள் செயல்படவில்லை. குடிநீர் தொட்டி காட்சி பொருளாகவே உள்ளது. இப்பகுதியினர் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

ஆறுமுகச்சாமி, முன்னாள் கவுன்சிலர்

தெருவிற்கு வரும் கழிவுநீர்

இப்பகுதி தெருக்களில் சாக்கடை தடுப்புச்சுவர் இடிந்துள்ளது. சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் தெருவிற்கு வந்து விடுகிறது. குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு மீண்டும் முறையாக சீரமைக்காததால் பள்ளமாக உள்ளது. இதனால் டூ வீலரில் வருபவர்கள் விபத்திற்குள்ளாகின்றனர்.

முத்துமாறன், லோடுமேன்

துார்வாரி 4 மாதமாச்சு

மருதநாடார் ஊரணி செல்லும் ஓடை துார்வாரப்பட்டு 4 மாதங்களாகிறது. ஓடை கழிவுகள் எடுக்கப்பட்டு ரோட்டிலே கொட்டப்படுகிறது. துர்நாற்றம் ஏற்படுத்துவதோடு போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.

சுபாஷ், உரிமையாளர், அலைபேசி கடை

Related posts

Leave a Comment