காமராஜர் பிறந்த நாள் பேட்டி தொடர்ச்சி…

தன்னலமற்ற தலைவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் 1970 ல் நடந்த பொது கூட்டத்திற்கு வந்த போது கட்சி நிதிக்காக ரூ.100 ஐஅவரிடத்தில் கொடுக்க முயன்ற போது வாங்க மறுத்து விட்டார். அரசியிலில் நேர்மை, வாழ்வில் துாய்மை, நாணயம் என வாழ்ந்து காட்டியவர். தமிழகத்தில் ‘பெல்’ நிறுவனம் அமைக்க இடம் பார்க்க மத்திய குழுவினர் தேவையான நிலம், தண்ணீர் வசதி இல்லை என முதல்வராக இருந்த காமராஜரிடம் கூறினர். உடன் அவர் திருச்சிக்கு அருகில் தேவையாவன இடம் , காவிரி ஆறு ஓடுவதை சுட்டி காட்டி அங்கு அமைக்க கூறினார். படித்த இன்ஜினியர்கள், தொழில் நுட்ப வல்லுனர்களாக இருந்தும் தங்களுக்கு இது தோன்றவில்லையே என வியந்து பாராட்டி சென்றனர்.

Related posts

Leave a Comment