நூதன முறையில் பணம் மோசடி

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி சுற்று கிராம பகுதி ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் நுாதன முறையில் பணம் மோசடி நடந்துஉள்ளது.

இங்குள்ள ஒரு சில விற்பனையாளர்களின் அலைபேசி எண்ணிற்கு சென்னை சிவில் சப்ளை கமிஷனர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறிய நபர், உங்கள் மீது அதிக புகார் வந்துள்ளது.நான் நினைத்தால் உங்கள் எஸ்.ஆர்., பதிவேட்டில் கை வைத்து விடுவேன். நடவடிக்கை எடுக்காமல் இருக்க நான் அனுப்பும் வங்கி கணக்கில் உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை போடுங்கள், என கூறி உள்ளார்.

அதிர்ச்சியுற்ற விற்பனையாளர் அலைபேசி ட்ரூ காலரை பார்த்த போது சி.எஸ். சி. , என இருந்துள்ளது. இதை தொடர்ந்து காரியப்பட்டியில் மூவர், நரிக்குடி, அருப்புக்கோட்டை தலா ஒருவர் என வங்கி கணக்கில் பணத்தை போட்டுள்ளார். பிரச்னை ஏற்படுமோ என பயந்து போலீசில் புகார் கொடுக்க தயங்குகின்றனர். –

Related posts

Leave a Comment