இங்க் காயவில்லை… தொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் வர்த்தகம் இல்லை… ட்ரம்ப் பளிச்!!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீஜிங்குடன் இரண்டாவது கட்ட வர்த்தக தொடர்பு குறித்து பேசப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போட்டி நிலவி வரும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபருடன் தற்போது பேசப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீனாவுடன் இரண்டாவது கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ட்ரம்ப், ”பீஜிங்குடன் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் அதன் இங்க் காய்வதற்கு முன்பு பிளேக் நோயால் எங்களை தாக்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே க்டன்தாஹ் ஜனவரி மாதம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு, எரிவாயு, பொருட்கள் என்று மொத்தம் 200 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் தற்போது தெரிவித்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் கொரோனா பரவுவதற்கு சீனாதான் காரணம் என்று ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தவர் ஒரு கட்டத்தில் சீனா வைரஸ் என்றும் அழைத்தார். வுகானில் இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான் வைரஸ் பரவியது என்று கூறினார். சீனாவுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் இணைந்து பல உணமைகளை மறைக்கிறது என்றார். இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை ட்ரம்ப் நிறுத்தினார்.

இத தொடர்ச்சியாக தற்போது ட்ரம்ப் கவனம் ஹாங்காங் பக்கம் திரும்பியுள்ளது. ஹாங்காங் மீது சிறப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் அதை அடக்குமுறை சட்டம் என்று விமர்சித்துள்ளார். அந்த சட்டத்தை அமல் செய்யும் சீன அதிகாரிகளுடன் வர்த்தகம் வைத்துக் கொள்ளும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அதிரடியாக தெரிவித்தார். அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டார். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே முதல் கட்டத்தில் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இரண்டாம் கட்டத்தில், சீன தொழில்நுட்ப அறிவுசார் திறன், தொழில்துறை உளவுகளை பகிர்ந்து கொள்வது, அரசு சார் தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்குவது குறித்து பேசுவதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது வர்த்தகம் குறித்து பேசப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment