M.k Stalin

எட்டாக்கனியாக இருந்த கல்வியை மதியஉணவு திட்டத்தால் எல்லோருக்கும் பந்திவைத்த காமராஜரின் பிறந்தநாளில் அவரின் திருவுருவ படத்துக்கு மரியாதைசெய்தேன். இந்நாளை கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடசெய்த கலைஞருக்கும் காமராஜருக்கும் கொள்கைமுரண் இருந்தாலும் குறிக்கோள் எல்லாம் சமத்துவமும் சமூகநீதியுமே.அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது உரிமையாய் இறுதி பணிகளாற்றிய பெருந்தலைவர், முதுமையிலும் நம் தலைவர் @mkstalin அவர்களின் திருமணம் வந்து வாழ்த்தினார். சமூகநீதிக்காக பெரியார்,அண்ணா,கலைஞர் ஓரணியில் நின்று சமர்செய்ய, காமராஜரோ அப்போரை தன் அணிக்குள்ளேயே தொடங்கினார். கல்வி தந்தவரை போற்றுவோம்.

Related posts

Leave a Comment