அதிரடி காட்டும் முகேஷ் அம்பானி.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய திட்டம்.. !

உலகளவில் ஆறாவது பெரும் பணக்காரராகவும், ஆசிய கண்டத்தின் முதல் பணக்காரராகவும் இருக்கும் முகேஷ் அம்பானியின் காட்டில் பண மழை பெய்து கொண்டுள்ளது எனலாம். இப்படி பரபரப்பான விஷயங்களுக்கு மத்தியில் இன்று அதன் 43- வது பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டுள்ளது. இக்கூட்டத்தில் பேசி வரும் இந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

ஜியோவில் கூகுள் முதலீடு அதில் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 7.7 சதவீதம் பங்கின் மூலம், 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜியோவில் 12 முதலீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இது 13 வது மிகப்பெரிய முதலீடாகும். இதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் டிஜிட்டல் வர்த்தகத்தினை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

யார் யார் முதலீடு? பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், இன்டெல் கேப்பிட்டல், குவால்காம் வென்சர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது. ஆக மொத்தத்தில் ஜியோவின் 25.24% பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் 1,18,318.45 கோடி ரூபாய் நிதியினையும் திரட்ட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனத்தின் முதலீட்டினை சேர்த்து 1.48 டிரில்லியன் ரூபாயினை முதலீடாக பெற உள்ளது ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம்.

எவ்வளவு முதலீடு? அதன் மூலம் 1,18,318.45 கோடி ரூபாய் நிதியினையும் திரட்ட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனத்தின் முதலீட்டினை சேர்த்து 1.48 டிரில்லியன் ரூபாயினை முதலீடாக பெற உள்ளது ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம்.

ரிலையன்ஸின் உரிமை பங்கு வெளியீடு இதோடு ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. கடந்த மார்ச் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் மதிப்பு 1.61 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு மற்றும் உரிமை பங்கு வெளியீட்டு மூலம் திரட்டிய நிதியின் மூலம், தற்போது கடன் இல்லா நிறுவனமாகவும் மாறியுள்ளது.

Related posts

Leave a Comment