TNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி?

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் பொறியியல் படிப்பு உள்பட அனைத்து வகையான உயர் கல்வி படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உள்ளிட்ட எந்த பணிகளும் இதுவரை தொடங்கவில்லை.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் http://tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். இன்று மாலை 6 மணி தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி (16.8 .2020) மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விண்ணப்பத்திற்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். 465 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள நிலையில் விரும்பும் கல்லூரிகளில் சேர வேண்டும் எனில் இன்று முதல் மாணவர்கள் http://tneaonline.in/ விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த சில ஆண்டுக்கு முன்பு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. ஆனால் தற்போது தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Leave a Comment