வீழ வேண்டும் நிறவெறி.. யுஎஸ் பல்கலைக்கழகத்தைக் கலக்கும் 2 இந்திய மாணவர்கள்!

கான்சாஸ் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவின் கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் பயிலும் உயரம் தாண்டுதல் வீரர் உள்ளிட்ட இரண்டு இந்திய மாணவர்கள் நிறவெறிக்கு எதிராக ஆளுக்கு ஒருபக்கம் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து உலகெங்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இந்திய மாணவர்கள் இதுதொடர்பாக தீவிரக் களப் பணியாற்றி வருகின்றனர்.

தேஜஸ்வின் சங்கர் ஒருவர் தேஜஸ்வின் சங்கர். இவர் தேசிய உயரம் தாண்டுதல் சாம்பியன் ஆவார். இவர்தான் களத்தில் முன்னணியில் இருக்கிறார். பிளாய்ட் கொலையைத் தொடர்ந்து கான்சாஸ் பல்கலைக்கழகத்திலும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இந்தப் போராட்டம் வெடிக்க வேறு காரணம் அமைந்தது. அதாவது கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மாணவர் அமைப்பின் தலைவரான ஜேடன் மெக்நீல் என்பவர், ஜார்ஜ் பிளாயிட் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேஜஸ்வின் முன்னெடுத்த போராட்டம் மெக்நீலின் கருத்தை எதிர்த்து அங்கு போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தைத்தான் தேஜஸ்வின் சங்கர் உள்ளிட்டோர் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். மாணவர்கள் – விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவராக இருக்கிறார் தேஜஸ்வின். இந்தக் குழு அவசரமாக ஜூம் மீட்டிங் நடத்தி போராட்டத்தை அறிவித்தது

தேஜஸ்வின் பேட்டி இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு தேஜஸ்வின் அளித்த பேட்டியில், தடகள வீரர்களுடன் இணைந்து நிறவெறிக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். டிவிட்டரில் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் போட்டு விட்டு போய் விடலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரக் கூடாது. அதைப் புரிய வைக்கவே இந்தப் போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.

களத்தில் மற்றொரு இந்திய மாணவர் ஒரு வீரனாக, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது எனது தார்மீக கடமை என்றார் தேஜஸ்வின். இவர் போலவே இன்னொரு இந்திய மாணவரான வேதாந்த் குல்கர்னி என்பவரும் இன்னொரு பக்கம் குரல் கொடுத்து வருகிறார். இவர் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை நிறவெறியால் ஒதுக்குவதை, தாழ்த்துவதை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.

குல்கர்னி டிவீட் இதுதொடர்பாக குல்கர்னி போட்ட டிவீட்டில் அமெரிக்காவில் வசிக்கவும், படிக்கவும் சர்வதேச மாணவர்களுக்கு தகுதி உள்ளதாக கூறியிருந்தார். இதற்கும் மெக்னீல் ஒரு கமெண்ட் போட்டார். அதில், உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அமெரிக்காவில் வசிப்பது என்பது மனித உரிமை அல்ல என்று கூறியிருந்தார். இதுவும் புயலைக் கிளப்பி விட்டது. குல்கர்னிக்கு ஆதரவாக பலரும் தற்போது திரண்டு வருகின்றனர்.

இந்திய மாணவர்கள் போராட்டம் இப்படி இரு வேறு காரணங்களுக்காக கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் போராட்டங்களில் இரண்டு இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இனவெறியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாணவர் சங்க தலைவர் ரிச்சர்ட் மயர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment