Corona 16-07-2020

காஞ்சி: கோவை மாவட்ட கலெக்டரை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

🔲தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

🔲கடந்த ஓரிரு நாட்களாக அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் —————————-

Related posts

Leave a Comment