ஒழுங்குபடுத்துங்க: சேதமுற்ற மேல்நிலை தொட்டிகளால் அச்சம்

சிவகாசி:மாவட்டத்தில் நகர் , கிராம பகுதிகளில் உள்ள சேதமடைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளால் எந்நேரமும் ஆபத்து உள்ளதால் இவற்றை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ஏராளம் கட்டப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலானவை கட்டப்பட்டு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. இருப்பினும் இதில்தான் குடிநீர் ஏற்றப்பட்டு சப்ளையும் நடக்கிறது. இவைகள் குடியிருப்புகள், ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் போன்று மக்கள் நடமாடும் பகுதியில்தான் அதிகம் உள்ளன .

தற்போது தொட்டிகள்,துாண்களில் சிமென்ட் பெயர்ந்து வெறும் கம்பிகளால் காட்சி தருகிறது. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சில தொட்டிகளில் மராமத்து பணி பெயரில் கண்துடைப்பாக வெறும் பெயின்ட் மட்டுமே அடிக்கப்பட்டு ‘பள பள’ என காட்சியளிக்கிறது. ஆனால் தொட்டிகள் முறையாக சீரமைக்கப்படவில்லை.குழந்தைகள் விபரீதம் தெரியாமல் தொட்டி அருகிலே விளையாடுகின்றனர். தொட்டிகளை அகற்றவோ,பராமரிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை முன்னெச்சரிக்கை

பெரும்பாலான தொட்டிகள் பயன்பாட்டில் இல்லாமல் வெறுமனே காட்சியிளிக்கிறது . குடியிருப்புகள் , மக்கள் நடமாடும் பகுதியில் தொட்டிகள் இருப்பதால் விபரீதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முனீஸ்பாண்டி, வழக்கறிஞர், சிவகாசி.

Related posts

Leave a Comment