கருப்பர் கூட்டம் எதிராக பக்தர்கள், பா.ஜ., ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்ட யூடியூப் சேனல் நிர்வாகிகளை கைது செய்ய கோரி மாவட்டத்தில் 250 க்கு மேற்பட்ட இடங்களில் பக்தர்கள்,பா.ஜ., ,ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகரில் நகர தலைவர் புஷ்பக்குமார் தலைமை வகித்தார். பொதுசெயலாளர்கள் கணேஷ்குமார், ஆரியன் பிரபாகரன், மாவட்ட ஐ.டி.,பிரிவு பொது செயலாளர் செல்வக்குமார் பங்கேற்றனர். *ஒன்றிய பகுதிகளில் தலைவர்கள் பார்த்தசாரதி, நாகராஜன், முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கஜேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தங்களது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.

கவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்: பா.ஜ., சார்பில், கட்சி நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கந்தசஷ்டி பாடி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் சோலையப்பன், மாவட்ட செயலர் சரவணதுரைராஜா, மாரிமுத்து, முருகன் பங்கேற்றனர்.

அருப்புக்கோட்டை: புளியம்பட்டி பகுதியில் பா.ஜ ., சார்பில் முருக பக்தர்கள் வீடுகள் முன்பு கந்த சஷ்டி கவசம் பாடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகாசி: பா.ஜ., சார்பில் முருகர் படம் முன்பு கந்த சஷ்டி கவசத்தை பாடி வீட்டுக்கு வீடு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பிரசார பிரிவு தலைவர் தங்கராஜன் , மூர்த்தி . ஜோசப்ராஜ், திருமமலைராஜன், மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டன

Related posts

Leave a Comment