சமூக வலைதளத்தில் பெயர்கள்: தொற்று பாதித்தவர்கள் வேதனை

ஸ்ரீவில்லிபுத்துார்:சமூகவலைதளத்தில் தங்களின் பெயர்கள் வெளியாவதால் கொரோனாவால் பாதித்தவர்கள் வேதனையடைந்து உள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்தவர்களின் முடிவுகள் கொண்ட பட்டியல் தினமும் தாலுகா வாரியாக அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பபடுகிறது. அதிகாரிகள், செய்தியாளர்களுக்கு மட்டுமே தெரியவேண்டிய பட்டியல் தனிநபர்கள் ‘வாட்ஸ்ஆப்’ல் சென்று விடுகிறது. இதை பல்வேறு குரூப் களில் பார்வேர்டு செய்கின்றனர். ஏற்கனவே வேதனையில் இருக்கும் தொற்று பாதித்தவர்கள் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்

Related posts

Leave a Comment