பிளஸ் 2ல் விருதுநகருக்கு 4வது இடம்

விருதுநகர்:பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் 2018-19ல் மாநிலத்தில் 7வது இடம் பிடித்த விருதுநகர் மாவட்டம் தற்போது சற்று முன்னேறி 4வது இடத்திற்கு வந்துள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985ல் தனி மாவட்டமாக உருவானது முதல் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து வந்தது விருதுநகர் மாவட்டம்.

2013–14, 2015–16, 2018–19 ல் 3 வது இடம் பிடித்தது. இதை தவிர்த்து 30 ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்த விருதுநகர் 2018-19ல் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது 214 பள்ளிகளை சேர்ந்த 22,194 பேர் தேர்வு எழுதியதில் 21,364 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம் 96.26. இதன் மூலம் விருது நகர் 7வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பெறும் முதலிடம் தற்போதும் கிடைக்காது பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் 2018-19 ஐ காட்டிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Leave a Comment