மண்டியிட வைக்கும் மணல்; விழிப்பில்லையேல் விபத்து

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான ரோடுகளில் மணல் குவியலுக்கு பஞ்சமில்லை. ரோட்டின் பாதி அளவை இவைகள் ஆக்கிரமித்துள்ளன. இதற்கு நான்கு வழிச்சாலையும் விலக்கல்ல.சர்வீஸ் ரோடுகளை சொல்லவே வேண்டாம். இதன் வழியாக பயணிக்கும் டூவீலர் ஓட்டிகள்தான் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

தெரியாமல் வேகமாக வருவோர் விபத்தினை சந்திக்கின்றனர். ஹெல்மெட் போடாது செல்வோர் கண்களை பதம்பார்க்கிறது இந்த மணல் கூட்டம்.இது போன்ற பிரச்னைகள் இருந்தும் துறை அதிகாரிகள் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். இனியாவது இதன்மீது சற்று கவனம் கொள்ளலாமே.

Related posts

Leave a Comment