மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

விருதுநகர்:காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி விருது நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் கலெக்டர் கண்ணன்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி.,பெருமாள், டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன் பங்கேற்றனர்.

* கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வட்ட தலைவர் வைரவசாமி, துணைத் தலைவர் பாலமுருகன், பொதுச்செயாலளர் சங்கரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் சங்கரமூர்த்தி பங்கேற்றனர்.

* கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு வளாக சிலைக்கு செயலாளர் சபரிமுத்து மரியாதை செலுத்தினார். தலைவர் அரசன் கணேஷ்குமார், உப தலைவர் காந்தி பங்கேற்றனர்.

* மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் விஜி, இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, தொகுதி பொறுப்பாளர் சங்கர் பங்கேற்றனர்.

* கே.வி.எஸ்., மானேஜிங் போர்டு வளாக சிலைக்கு செயலாளர் சபரிமுத்து மரியாதை செலுத்தினார். தலைவர் அரசன் கணேஷ்குமார், உப தலைவர் காந்தி பங்கேற்றனர்.

* மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் விஜி, இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, தொகுதி பொறுப்பாளர் சங்கர் பங்கேற்றனர்.

* தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன் மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.,க்கள் தங்கம் தென்னரசு, சீனிவாசன், நகர செயலாளர் தனபாலன் பங்கேற்றனர்.அருப்புக்கோட்டை: டி.இ.ஒ.. அலுவலகத்தில் சண்முகநாதன் தலைமையில் நடந்த விழாவில் பணியாளர்கள், கோவிலாங்குளம் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் ரவிசங்கர் கலந்து கொண்டனர்.

* உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், மணிமேகலை, கண்காணிப்பாளர் ராமலிங்கம், உதவியாளர் மகேஷ், இளநிலை உதவியாளர்கள் தீப காமாட்சி, முத்துமாரி கலந்து கொண்டனர். சாத்துார்: பஸ்ஸ்டாண்டு காமராஜர் சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் ராஜவர்மன் எம்.எல்.ஏ.. ஜெ., பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் முனிஸ்வரன் மாலை அணிவித்தனர்.

* நகர காங்., தலைவர் தாமோதரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.

* த.மா.கா.நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் துணைத் தலைவர் பாண்டியன், கட்சியினர் மாலை அணிவித்தனர். 118 பேருக்குஇலசவ அரிசி, காய்கறி, அன்னதானம் வழங்கபட்டது. ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒயிட்பீல்டு மழலையர் துவக்கபள்ளியில் தாளாளர் ராஜாராம் தலைமையில் நடந்தது.

* ஸ்ரீவி.,ராமகிருஷ்ணாபுரத்தில் சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமையில் மாலையணிவித்து வணங்கினர். நிலவள வங்கி தலைவர் முத்தையா, நகர செயலர் இன்பதமிழன், அர்பன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், அக்ரோ தலைவர் முருகன் ,அங்குராஜ்பங்கேற்றனர்.

* காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் பட்சிராஜா வன்னியராஜ் தலைமையில் மாலையணிவித்து வணங்கினர். பெரியசாமி, தங்கமாரி, முருகேசன் பங்கேற்றனர்.

* சவுந்திரபாண்டியனார் நலசங்கத்தின் சார்பில் தலைவர் ஜெயராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்தனர். துணைத் தலைவர் ராஜையா, பொருளாளர் தேரிச்சாமி, கருப்பசாமி பங்கேற்றனர்.

* வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி தலைமையில் மாலையணிவித்து வணங்கினர். தாலுகா செயலர் கோவிந்தன் பங்கேற்றார்.

* வத்திராயிருப்பு கிழக்கு வட்டாரகாங்கிரஸ் சார்பில் ராமசந்திரபுரத்தில் மாவட்ட துணைத்தலைவர் ராமராஜ், செயலர் நாகராஜ், ஆர்.டி.ஐ.,பிரிவு மாநில செயலர் தமிழ்செல்வன், இலக்கிய அணி சுந்தரம் வணங்கினர். ராஜபாளையம்: மேற்கு மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை வகித்தார். நகர தலைவர் சங்கர் கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன் சக்தி மோகன், அலுவலக செயலாளர் வெங்கட்ராமன், ரவிராஜா கலந்து கொண்டனர்.

* செட்டியார்பட்டி நகர் காங்., சார்பில் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அய்யனார், பொது செயலாளர் ராஜசோழன், துணைத்தலைவர் மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர்.

* தி.மு.க.,எம்.எல்.ஏ.,தங்கப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் ராமமூர்த்தி, பேரூர் செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் தொந்தியப்பன், துணைச் செயலாளர் சரவணன் கலந்து கொண்டனர்.காரியாபட்டி: இந்து நாடார் உறவின்முறை சார்பாக திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து, இனிப்பு வழங்கினர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.

* மல்லாங்கிணர் பஸ்ஸ்டாண்டில் திருவுருவப் படத்திற்கு நமது மனித பாதுகாப்பு கழகம் சார்பில் செயலாளர் பிரின்ஸ், துணைச் செயலாளர் தங்கப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினர்.

Related posts

Leave a Comment