வாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்

அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள் ஓய்விற்கு பிறகு தன் குடும்பத்தோடு ஒன்றி வாழ்வர். ஓய்வு பெற்ற பின்னும் ஏதாவது வகையில் மக்களுக்கு தன் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு.

அந்த வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் திரவியம் 72, தன் ஊர் மக்களுக்கு உதவிகளை செய்து வருபவர். ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகிறார். வறுமை கோட்டில் உள்ளவர்களின் நிலை அறிந்து தக்க சமயத்தில் உதவி செய்கிறார். ஏ

ழை மக்கள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் ஈமச்சடங்குக்காக ரூ. 2 ஆயிரம் கொடுத்து உதவுகிறார். தன் வீட்டின் முன்பு எப்போதும் பொதுமக்களுக்காக இலவச குடிநீர் வினியோகம் செய்கிறார். இவரது சேவையை உணர்ந்து ஊர் மக்களே இவரை ஊராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தி வெற்றி பெற செய்துள்ளனர்.

அதன்படி முதல் பணியாக தடையில்லா குடிநீர், நீர்நிலைகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், கண்மாய் மடை பகுதிகளை துார் வாரி மழை நீர் சேகரம் போன்ற பணிகளை செய்துள்ளார். பல ஆண்டுகளாக பூட்டி கிடந்த நுாலகத்தை திறந்து மாணவர்களின் அறிவுப் பசியை போக்கி உள்ளார்.ஊராட்சி மூலமாகவும் தன் சொந்த செலவிலும் பல பணிகளை செய்கிறார். கொரோனா நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல், கபசுர குடிநீர் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார். செயல்படாத இ-சேவை மையத்தை செயல்பட செய்து தன் சொந்த செலவில் கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதுபோன்ற தன்னலமற்ற ஊராட்சி தலைவரை பாராட்ட 99945 23835.

Related posts

Leave a Comment