யாருப்பா இந்த டொமினிக்? ஆமை வேகத்தில் ஆடி டீமை காப்பற்றிய இங்கிலாந்து வீரர்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டொமினிக் ஸிப்லி நிதான ஆட்டம் ஆடி அணியை காப்பாற்றினார். வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் துவங்கியது.

டாஸ் முடிவு போட்டி துவங்கும் முன் மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின் டாஸ் போடப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். துவக்கத்தில் வேகப் பந்துவீச்சில் விக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.

அழுத்தம் தந்த சேஸ் ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களால் முதல் நாள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், முதல் இரண்டு விக்கெட்களை சுழற் பந்துவீச்சாளர் ராஸ்டன் சேஸ் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார். அப்போது ஸிப்லி சிறப்பாக ஆடினார்.

விக்கெட் வீழ்ச்சி 29 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாக் கிரவ்ளி டக் அவுட் ஆனார். கேப்டன் ஜோ ரூட் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். மூன்று விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஸிப்லி நிதான ஆட்டம் ஆடி வந்தார்.

ஆமை வேக ஆட்டம் பென் ஸ்டோக்ஸ் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து விக்கெட் விழாமல் ஆடினார். ஸிப்லி 253 பந்துகளை சந்தித்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 33.99 மட்டுமே. அவரது ஆமை வேக ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.

இங்கிலாந்து ஸ்கோர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து இருந்தது. ஸிப்லி 86, பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இருவரும் சேர்ந்து 50 ஓவர்களுக்கும் மேல் பேட்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர வீரர்? முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த ஸிப்லி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அரைசதம் அடித்து அணியின் நம்பிக்கையான வீரராக மாறினார். இது அவரது 9வது டெஸ்ட் போட்டி மட்டுமே. இங்கிலாந்து அணியின் நிரந்தர துவக்க வீரராக ஸிப்லி மாறிவிடுவார் என இப்போதே பேச்சு அடிபடுகிறது.

வெ.இண்டீஸ் திட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் திட்டம் நிறைவேறவில்லை. வேகப் பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், ராஸ்டன் சேஸ் மட்டுமே சிறப்பாக வீசி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் 1 விக்கெட் வீழ்த்தினார்.

Related posts

Leave a Comment