குளறுபடி அறிவிப்பால் குழப்பம்

ராஜபாளையம்:செட்டியார் பட்டி, கலங்காபேரியில் ஊரடங்கு அறிவித்தும் போக்குவரத்து முடக்கப்படாததால் இதன் நோக்கம் செயலற்று குழப்ப நிலை தொடர்கிறது

செட்டியார் பட்டி சுற்றி தளவாய்புரம், முகவூர், முத்துச்சாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. முகவூர் ரோட்டின் ஒரு புறம் செட்டியார்பட்டி , மறுபுறம் முகவூர் ஊராட்சி வருவதால் ஒரு புறம் கடைகள் அடைப்பு,மறு புறம் திறக்கப்பட்டுள்ளது. முகவூர் பகுதியினர் அதிகம் நடமாடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான வாகனங்களும் இப்பகுதி வழியாக சென்று வருகிறது. இதனால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து வியாபாரிகள் , பொது மக்கள் செட்டியார்பட்டி பேரூராட்சி முன் முற்றுகையிட்டனர். தாசில்தார் ரமணன் தலையிட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்க கலைந்து சென்றனர்.

Related posts

Leave a Comment